×

தருமபுரம் ஆதீனம் இன்று ஞான ரதயாத்திரை கவர்னர் ஆர்.என்.ரவி துவக்கி வைக்கிறார்

மயிலாடுதுறை, ஏப்.19: தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் தொடங்கவுள்ள ஞான ரதயாத்திரையை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (19ம் தேதி) தொடங்கி வைக்கிறார். இது குறித்து, ஆதீன பொதுமேலாளர் கோதண்டராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தெலங்கானா மாநிலம் காளீஸ்வரத்தில் 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் வரும் 24ம் தேதி நடக்கும் புஷ்கர விழாவில் பங்கேற்கிறார். இதற்காக, இன்று (19ம்தேதி) தருமபுரம் ஆதீனம் சொக்கநாத பெருமானுடன் காலை 10.30 மணி அளவில் ஞானரத யாத்திரை புறப்படுகிறார். இந்த ரத யாத்திரையை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார். குத்தாலம், திருப்பனந்தாள், விருத்தாச்சலம், வேப்பூர், திருக்கோவிலூர், திருவண்ணாமலை, வேலூர், சித்தூர் வழியாக திருப்பதி செல்கிறார். 20ம் தேதி திருப்பதி திருமலாவில் இருந்து புறப்பட்டு திருச்சானூர், 21ம் தேதி காளகஸ்தியில் இருந்து புறப்பட்டு சைலம் செல்கிறார். 23ம் தேதி சைலத்தில் இருந்து புறப்பட்டு காளீஸ்வரம் சென்றடைந்து, அன்று அதிகாலை புஷ்கரம் விழாவில் பங்கேற்கிறார். பின்னர், 25ம் தேதி காளீஸ்வரத்தில் இருந்து விஜயவாடா, 26ம் தேதி சென்னை, 27ம் தேதி புதுச்சேரி, கடலூர் வழியாக தருமபுரம் ஆதீன மடத்துக்கு வந்தடைகிறார்.  இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Dharmapuram Aadeenam ,Gnana Rathayathri ,Governor ,RN ,Ravi ,
× RELATED கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர்...